சேலத்தில் மீன் சந்தையில் நடந்த திடீர் சோதனை - அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்!

சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சூரமங்கலம் மீன் சந்தைக்கு சென்ற அதிகாரிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன 130 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை வாத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com