பதுக்கல் என திடீர் ஆய்வு - அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திண்டுக்கல் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பருப்பு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மொத்த வியாபாரிகள் பருப்பு வகைகளை குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, அதன் விலையை ஏற்றம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். அத்துடன் 3 கடைகளில் அழுகிய பழங்களை வைத்து பழச்சாறு விற்பனை செய்வதை கண்டுபிடித்து, தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com