மேக்கரை வனப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீ

x

மேக்கரை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை, கேரள வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அடர்வனப் பகுதியில் திடீரென பற்றிய தீ, இரண்டாவது நாளாக எரிந்து வருகிறது. இதில் சுமார் 100 ஏக்கர் பரப்பிலான அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்த நிலையில், தீயானது கேரளா வனப்பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளா வனத்துறையினர் முகாமிட்டு தீயை கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்