குரூப்-1 தேர்வுக்கு கூகுள் மேப் பார்த்து சென்ற மாணவி- 5 நிமிடம் தாமத‌த்தால் தேர்வு எழுத முடியாத சோகம்

x

கோவையில் குரூப் ஒன் தேர்வுக்கு கூகுள் மேப் பார்த்து சென்ற மாணவி ஒருவர், 5 நிமிடம் தாமதத்தால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளியில் குரூப் ஒன் தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வு எழுதுவதற்காக வடவள்ளியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பல்வேறு இடங்களை சுற்றி சென்றுள்ளார். இதனால், ஐந்து நிமிடம் தாமதமாக வந்த‌தால், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டார். 2019 முதல் இந்த தேர்வுக்காக தயாராகி வந்த‌தாகவும், பள்ளி நிர்வாகம் கூகுளில் அப்டேட் செய்யாத‌தால் தனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்