தேர்வு எழுத வீட்டிலிருந்து ஓடிய மாணவன் - "இது தான்யா படிக்கிற புள்ள..."

x

வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சென்ற சென்னை மாணவனை தனிப்படை போலீசார் டெல்லியில் மீட்டனர். சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடியுள்ளார். இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து , சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாணவன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, டெல்லி செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார், டெல்லி ஆர்.பி.எப் போலீசார் உதவியுடன் மாணவனை மீட்டனர். பின்னர் மாணவனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு அமெரிக்காவில் படிக்க விருப்பம் என்றும், அதனால் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் தேர்வில் கலந்துகொள்வதற்காக, டெல்லி சென்றதும் தெரியவந்துள்ளது. 36 மணி நேரத்திற்குள் மாணவனை மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்