சாலையோரம் வசிக்கும் மாணவி பிளஸ் 2-வில் சாதனை.. "ஸ்கூல்லே எல்லாம் படிச்சி முடிச்சிடுவேன்..மேல படிக்க முதல்வர் ஐயா உதவுனா நல்லாயிருக்கும்"

x

சென்னை யானை கவனியில் உள்ள வால் டெக்ஸ் ரோடு அருகே சாலையோரம் வசிப்பவர் குட்டியம்மாள். இவரது மகள் மோனிஷா நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவி மோனிஷா, காவல்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சாலையோர கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் மாணவி மோனிஷா கோப்பை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோனிஷா மேற்படிப்பு படிக்க தேவையான குடும்ப சூழல் இல்லாததால், தமிழ்நாடு முதல்வர் உதவ முன்வர வேண்டுமென, அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்