இறந்து போய் பலருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி - நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு

x

கர்நாடகாவில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி மூளைச்சாவு அடைந்ததால், அவரது பெற்றோர் மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். ரக்சிதா என்ற கல்லூரி மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கும் போது தவறி விழுந்துள்ளார். அப்போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ரக்சிதா, மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ரக்சிதாவின் பொற்றோர் முன்வந்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்