கொய்யா பறிக்க சென்ற +2மாணவன் கிணற்றில் சடலமாக மிதந்த அதிர்ச்சி - குடும்பத்தார் தலையில் இறங்கிய இடி

x

ராசிபுரம் அருகே 12ஆம் வகுப்பு முடித்த மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொம்பம்பட்டியை சேர்ந்த தீபக் என்பவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் கிணற்றின் அருகே உள்ள கொய்யா மரத்தில் பழம் பறிக்க சென்ற போது, தவறி கிணற்றில் விழுந்துள்ளார். சத்தம் கேட்டு உறவினர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீபக்கை சடலமாக மீட்டனர். கொய்யாப்பழம் பறிக்கச் சென்று உயிரிழந்த‌து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்