இன்றும் நிலைகொண்டு புரட்டி எடுக்கும் இசைப்புயல்! சில சுவாரஸ்ய தகவல்கள் | HBD ARRahman

x

இன்றும் நிலைகொண்டு புரட்டி எடுக்கும் இசைப்புயல்! சில சுவாரஸ்ய தகவல்கள்

ஒரு புயல் எப்படி உருவானதில் இருந்து வலுவடைந்து சூறாவளியாக பெரும்தாக்கத்தை ஏற்படுத்துமோ, அப்படி இசைபுயலாக உருவாகி இந்தியாவையே புரட்டிப்போட்டவர்...

அறிமுகமானது முதலே கோடிக்கணக்கான மனங்களை ஆட்கொண்டவர்தான் இந்த அல்லா ரக்கா ரகுமான்....


1967ஆம் ஆண்டு இதே தினத்தில் பிறந்து திலீப்குமாராக அறியப்பட்டவர், இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு ரஹ்மானாக உருவெடுத்தார்.


தந்தை இசையமைப்பாளர் என்பதால், சிறுவயதிலேயே இசை மீது பற்று, எம்.எஸ். விஸ்வநாதன் இளையராஜா போன்ற ஜாம்பவான்களிடம் பணி, வெளிநாட்டில் இசை கல்வி, விளம்பரங்களுக்கு மியூசிக், தனி ஆல்பம் என இயங்கிக்கொண்டிருந்தவர், மணிரத்னத்தின் அறிமுகம் கிடைத்து சினிமாவில் அறிமுகமானார். இசைப்புயல் ஆனார்...

ரோஜா தொடங்கி பொன்னியின் செல்வன் வரை மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ... CLASS!

கர்நாடிக், கிளாசிக், FOLK என இயங்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், மேற்கத்திய இசையை புகுத்தி புரட்சி செய்தார்...


மேற்கத்திய இசை மட்டுமல்லாது, அங்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் இங்கு கொண்டு வந்தார். காலத்திற்கு முந்தி யோசிப்பதால், இன்றும் சிறந்த இசையமைப்பாளராக சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார் ரஹ்மான்...


தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்தார்... ஆஸ்கரை வாங்கி இந்தியாவையே பெருமைப்படுத்தினார்...


தமிழ் சினிமாவிற்கு பல புதிய குரலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் ரஹ்மானுக்கு உண்டு. மின்மினி, உன்னிமேனன், ஹரிஹரன் என ரஹ்மானால் தமிழர்களிடம் பிரபலமானவர்கள் ஏராளம்....


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டாரோ, அதேயளவு பாடகர் ஏ.ஆர்.ரஹ்மானையும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையே, படத்திற்கு தனி விளம்பரம் என்றால், உச்சநட்சத்திரங்களின் படங்களில் பின்னணி இசையாலும், ஓப்பனிங் சாங்காலும் கலக்கியிருப்பார்...


மூன்று தசாப்தங்களாக இசையால் நாடு கடந்து கொண்டாடப்பட்டு வரும் ரஹ்மான், இசையமைப்பை தாண்டி LE MUSK என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த படத்திற்காக அவர் கொண்டு வந்துள்ள VIRTUAL REALITY தொழில்நுட்பமும் இந்திய சினிமாவிற்கு புது புரட்சிதான்...


ரோஜா படத்தின் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்து, இப்போது இந்தியாவையே இசையால் ஆட்சி செய்து வரும் இசைப்புயலை, பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கின்றனர் ரசிகர்கள்...Next Story

மேலும் செய்திகள்