50 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலை உலகெங்கும் தேடி அமெரிக்காவில் மீட்பு | Thiruvarur | Alathur

x

திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 9 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு, 3 பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறநிலையத்துறையினர் புகார் அளித்தனர். அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய போது, கோவிலில் இருந்த 9 சிலைகளும் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப்பட்டிருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை வைத்து, உலகெங்கும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு அருங்காட்சியங்களில் அந்த சிலைகள் இருப்பதை, அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த சிலைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்