சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

x

தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நமக்கு சம்பளம் வந்தால் போதும் தயாரிப்பாளருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது என்றும், தான் நடித்த படத்தில், லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு உள்ளது என்று கூறினார். அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று என்றும் அவர் பேசினார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சுக்கு நன்றி தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் முரளிராமநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்கும் போது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தெரிவித்த கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்