தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஏரியில் செத்து மிதந்த மகன்.. சென்னை அருகே சோகம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, மகன் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில், ஏரியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியை சேர்ந்த முரளி - ஹேமாவதி தம்பதியரின் மகன் சியாம் சுந்தர். இவர்,10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். சியாம் சுந்தர் செல்போனில் அதிக நேரம் வீடியோ கேம், சேட்டிங் செய்ததால், அவரது தாயார் கண்டித்ததுடன், செல்போனை மகனிடம் இருந்து பறித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் வீட்டைவிட்டு சியாம் சுந்தர் வெளியேறியுள்ளார். இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் அவரது தந்தை முரளி புகார் அளித்தார். இந்நிலையில், சியாம் சுந்தரின் சடலம் மண்ணூர் ஏரியில் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் செல்போன் தர மறுத்ததால் விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய மகன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்