மாணவனின் ஸ்கூல் பேக்கில் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு.. திறந்ததும் சீறிய பகீர் காட்சி

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், 7ஆம் வகுப்பு மாணவன் புத்தக பையில் கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதரக்குடி பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன், பள்ளிக்குச் செல்ல புத்தக பையை எடுத்த போது, கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்தது தெரிந்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பாம்பு பிடி வீரர் தினேஷ் என்பவர், பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்