குடியிருப்பு பகுதியில் ஹாயாக உலா வந்த ஒற்றை யானை

x

குடியிருப்பு பகுதியில் ஹாயாக உலா வந்த ஒற்றை யானை


கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடிய ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் பாடந்துறை பகுதியில் நடமாடி வரும் மக்னா வகையை சேர்ந்த ஒற்றை யானை, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் அந்த யானை, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளுக்குள் முழங்கினர். பின்னர் வனத்துறையினரும், அப்பகுதி இளைஞர்களும் நீண்ட நேரம் போராடி, அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்