மைதானத்தில் நிறுத்தப்பட்ட கல்லூரி பேருந்து - அடுத்தநாள் DRIVER - க்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, படவேடு கிராமத்தில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்ட தனியார் கல்லூரி பேருந்தை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிறுத்திய பேருந்தை, இன்று மீண்டும் எடுக்க சென்றபோது, பேருந்து திருடப்பட்டதை அறிந்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பேருந்தை திருடிய மர்ம நபர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்