அடுத்தடுத்து திருடுபோன பைக்குகள் - கையும் களவுமாக சிக்கிய நரிக்குறவர்கள்

x

புதுச்சேரியை சேர்ந்த பிரம்குமார் என்பவரின் இரு சக்கர வாகனம் கடந்த 7 ஆம் தேதி திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருடிய இரு சக்கர வாகனத்திலே வந்த நரிக்குறவர் காலணியை சேர்ந்த ஏழுமலை மற்றும் தனுசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேலைக்காக பல மாநிலங்கள் செல்லும் இருவரும் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் திருடப்பட்ட 4 உயர் ரக இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்