அடுத்தடுத்து இறந்து கிடந்த பன்றிகள் - ஆய்வில் வெளிவந்த வினோத காய்ச்சல்

x

கர்நாடகாவில் இறந்த காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், முதுமலையிலும் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த மாதம் உயிரிழந்த காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலும் கடந்த 3 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, இறந்த பன்றிகளின் உடல் மாதிரிகளை சேகரித்து வரும், கால்நடை மருத்துவர்கள், ஆய்வகத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதுமலை யானைகள் முகாமுக்கு காட்டுப் பன்றிகள் வராமல் இருப்பதற்கு, பாரம்பரிய முறைப்படி, பழைய சேலைகளைக் கட்டி தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்