கதண்டு வண்டு தாக்கி 10 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கதண்டு வண்டு தாக்கி 10 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கும்பகோணம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோரை கதண்டு வண்டுகள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே விலங்குடி பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை, மரத்திலிருந்த கதண்டு வண்டுகள் கடித்துள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
