ரூ. 20 லட்சம்.. கவுன்சிலர் மீது வந்த பரபரப்பு புகார்?

x

சென்னை, வளசரவாக்கத்தில் 20 லட்ச ரூபாய் பணத்தை கடனாக பெற்று எமாற்றியதாக கூறி திமுக கவுன்சிலர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்த தனசேகரன் என்பவரிடம், வளசரவாக்கம் 152 ஆவது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் பாரதி, அவருடைய தோழியுடன் சேர்ந்து 20 லட்ச ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில், பணத்திற்கான வட்டியும், அசலையும் திருப்பி தராமல் பாரதி எமாற்றி வருவதாக கூறி தனசேகரன் போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்