தனக்குத்தானே இரங்கல் 'ஸ்டேட்டஸ்'...அது உண்மையாகவே மாறிய சோகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காத்தாடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். 20 வயதான இவர், முகநூலில் தனக்குதானே கண்ணீர் அஞ்சலி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com