“உன் கை அற்புதம் செஞ்சிருச்சு“ - பென்சில் ஆர்ட்டில் கலக்கும் பள்ளி மாணவன்

x

தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் உருவ படத்தை பென்சில் ஆர்ட் மூலம் வரைந்த ஏழாம் வகுப்பு மாணவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னை நாவலூரை சேர்ந்த பள்ளி மாணவர் தமனேஷ், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் உருவ படத்தை பென்சில் ஆர்ட் மூலம் வரைந்து அசத்தியுள்ளார். சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற தமனேஷ், தான் வரைந்த ஓவியத்தை காவல் ஆணையர் அமல்ராஜிடம் பரிசரித்தார். அதனை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் தமனேஷ் வெகுவாக பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்