காவி நிற போஸ்டரால் பரபரப்பு... "கண்டா வர சொல்லுங்க.. அவரை கையோட குட்டி வாருங்க.."

x

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆல் இந்தியா ப்ரொபஷனல் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், டாலரை 40 ரூபாய்க்கு கொண்டுவருவாங்க என்று சொன்ன நபரை தேடுவதாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும், காணவில்லை என்ற தலைப்பில், காவி நிற உடை கொண்ட உருவம் கொண்ட அந்த போஸ்டர், அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, போஸ்டருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்