நிலச்சரிவினால் சிதைந்து போன சாலை... சிக்கி தவிக்கும் யாத்ரீகர்கள்

x

பிதோராகர் புறநகர் பகுதியான தார்ச்சுலா அருகே நிலச்சரிவு காரணமாக 100 மீட்டர் தொலைவு சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சாலையின் மறுக்கரையில் 300க்கும் மேலாக யாத்ரீகர்கள் சிக்கி தவிப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. சாலையை சீரமைக்க இரண்டு நாட்களாகும் என்பதால் யாத்ரீகர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, சாமோலி, டேராடூன், ஹர்த்வார், நைனிடால், ருத்ரபிரயாக் உத்தர்காஷி உள்ளிட்ட இடங்களில் புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்