ரத்த ஆறு ஓடிய உள்ளாட்சித் தேர்தல் -பற்றி எரிந்த வாக்கு சாவடி..-குண்டுவீச்சு தாக்குதலில் 18 பேர் பலி!

x

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் நாளானது, வன்முறை நிறைந்த நாளாக மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து கிளம்பி 18 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த மாதம் 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதியை அறிவித்ததில் இருந்தே, மேற்கு வங்க மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை நடக்க துவங்கியது. மொத்தமாக 12 சதவீத இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் 34 சதவீத இடங்களை கைப்பற்றி, தன் பலத்தை நிரூபித்தது. அதே போல இரண்டாம் இடத்தை பாஜக பெற்றது. 2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பஞ்சாயத்து தேர்தல், பலத்தை நிரூபிக்கும் இடமாக மாறியுள்ளது. கடந்த முறையும், சிறு சிறு வன்முறைகள் வெடித்தெழுந்தன. அந்த நிலை, இந்த தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய பாதுகாப்பு படைகள் வந்திறங்கின.

ஏற்கனவே, 10 பேர் உயிரிழந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்குள்ளாக மாறி மாறி குற்றசாட்டுகளை அடுக்கிபடி இருந்தன. இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு படை இருக்கிற தைரியத்தில், தேர்தலை நடத்தினார்கள். ஆனாலும், அதிர்ச்சியளிக்கும் வண்ணமாக, ,வடக்கு பர்கானாஸ், தெற்கு பர்கானாஸ் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் வாக்கு சீட்டுகள் தூக்கிய எறியப்பட்டு, சூறையாடப்பட்டன.

வாக்குப்பெட்டிகள் ஆற்றில் தூக்கி எறியப்பட்டன. கூச் பெஹார் மாவட்டத்தின் தின்ஹாட்டாவில், பாரவிட அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள ஒரு சாவடியில் வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மற்றொரு வாக்குச்சாவடியில், பொய்யான வாக்குப்பதிவு நடந்ததாகக கூறி வாக்குச் சீட்டுகளுடன் கூடிய வாக்குப்பெட்டியை உள்ளூர் மக்கள் எரித்தனர். இதே போல பல இடங்களில் கலவரம் வெடித்த நிலையில்தான், நிலைமை கை மீறி, 18 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாறி மாறி வசைபாடிக் கொண்டனர். கொடுமை என்னவெனில், கொல்லப்பட்டவர்களில் 10 பேர் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்கள்.சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் நடந்த உயிரிழப்புகள், மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்