"இது வெறும் பொம்மை யானை டா"...சுற்றுலா பயணிகளை கவர்ந்த ரீல் யானை..வெளியான வைரல் வீடியோ

x

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதி சாலையில் சிறிய ரக டெம்போவில் பயணம் செய்த ரோபோ யானைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். முதுமலை வனப்பகுதி சாலை வழியாக இரண்டு ரோபோ யானைகள் சிறிய ரக டெம்போ வாகனம் மூலம் உதகைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வாகனங்களில் இருந்த ரோபோ யானைகள் உண்மையான யானை போன்று தலையை அசைத்ததை, ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரளா சுற்றுலா பயணிகள் அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்