அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மான் - மீட்டு காட்டுக்குள் விட்ட வனத்துறையினர்

x

வேப்பனபள்ளி அருகே இந்தியாவில், அழிவின் விளிம்பில் இருக்கும் மிக அரிய வகை சருகு மானை வனதுறையினர் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகேயுள்ள தடதாரை கிராமத்தில் அரிய வகை விலங்கு ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்று வனத்துறையினர் பார்த்தபோது, அது அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை சருகு மான் எனக் கண்டறியப்பட்டது. மானின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின், நாரளப்பள்ளி காப்பு காட்டு வனப்பகுதியில் விடப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்