பயணிக்கு கொடுத்த உணவில் இருந்த துண்டு - வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு

டெல்லியில் இருந்து போபால் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் சிறிய பாலித்தீன் துண்டு இருந்ததாக கூறி எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையம், இந்த புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com