அரசு அதிகாரி வேடத்தில் மாற்றுத்திறனாளி... வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பணம் பறித்து மோசடி

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுத்திறனாளி ஒருவர், தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கூடிய வாகனத்தில் வந்திறங்கி அரசு அதிகாரி என மோசடி செய்ததாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி அடுத்த பாலாஜிநகரில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான பரணி நாகவேல். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறையில் திட்டமிடல் ஆணைய செயலராக பணியாற்றி வருவதாக கூறியிருக்கிறார். இதனிடையே, அறக்கட்டளை ஒன்றும் பரணி நாகவேல் நடத்தி வந்த நிலையில், இதே போல் அறக்கட்டளை நடத்தி வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்டவர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம், அரசு அதிகாரியாக பணியாற்றி வரும் தனக்கு உதவியாளர் தேவை எனவும், அறக்கட்டளைக்கு சில தொண்டு நிறுவனத்திடம் இருந்து பொருள்கள் வாங்கி வருவதாகவும் கூறி சுமார் 8 லட்சம் வரையிலான பணத்தை பரணி நாகவேல் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரணி நாகவேல் வழங்கிய பணிநியமண ஆணை போலியானது என கூறி ஆண்டவர், இது குறித்து போலீசில் புகாரளித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்