சிவகங்கை அருகே கிராவல் மணல் குவாரி மீது குண்டூசிகள் நிரப்பிய பெட்ரோல் குண்டு வீச்சு

x

சிவகங்கை அருகே, கிராவல் மணல் குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லின் இயந்திரம் மீது குண்டூசிகள் நிரப்பிய 5 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிராவல் மணல் குவாரியில் இயங்கி வந்த பொக்லின் இயந்திரம், வேலை முடிந்து நிறுத்தப்பட்டு, அதன் ஆபரேட்டர் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் இயந்திர ஆபரேட்டர் அறைக்குள் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், குண்டூசிகள் நிரப்பபட்ட 5 பெட்ரோல் குண்டுகளை இயந்திரத்தின் மீது வீசிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்