விபத்தில் உயிரிழந்த வளர்ப்பு நாய்... போலீஸ் தம்பதி செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்

x

விபத்தில் உயிரிழந்த வளர்ப்பு நாய்... போலீஸ் தம்பதி செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்


மயிலாடுதுறை அருகே விபத்தில் உயிரிழந்த தங்களது நாய்க்கு போலீஸ் தம்பதியினர் பேனர் வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்த போலீஸ் தம்பதியான ஹரிபாஸ்கரும், கார்குழலியும் தங்களது வீட்டில் நான்கு நாய்களை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் அந்த நாய்களில் ஒன்றான சச்சின், இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தது. இதனையடுத்து அதன் உடலை மீட்டு அடக்கம் செய்துள்ள போலீஸ் தம்பதியினர், அதற்கு கண்ணீர் அஞ்சலி பேனரும் வைத்துள்ளனர். சச்சின் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், தங்களது குழந்தைகளின் விருப்பப்படி கல்லறை அமைக்கப்போவதாகவும் ஹரிபாஸ்கர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்