வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற நபர், வலிப்பு ஏற்பட்டு திடீர் பலி! - ஹோமியோபதி சிகிச்சை தான் காரணமா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேம்பாகவுண்டன்புதூரை சேர்ந்தவர் காங்கமுத்து.

இவர் ஆவின் கூட்டுறவு பாலகத்தில் பணி புரிந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால், அதே பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்த சக்திவேலிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ஊசி மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட வலிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு காங்கமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தது உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில், ஹோமியோபதி சிகிச்சையால் தான் காங்கமுத்து உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியதையடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com