நின்று கொண்டிருந்த ரயில் மீது திடீரென ஏறிய நபர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் கூரை மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர், உயரழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தின் 7வது நடை மேடையில் மின்சார ரயில் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென அந்த ரயில் மீது ஏறி, உயரழுத்த மின் கம்பியை பிடித்த போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே, ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த அபிலாஷ் என்பதும், குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்