'பக்கா பிளான்' பல பெண்களிடம் மோசடி.!! டாக்டர் என கூறி 6 பெண் மருத்துவர்களிடம் வேலையை காட்டிய நபர்

x

சென்னை அடையாறு காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் தன்னுடைய மகளை தினேஷ் கார்த்திக் ராஜா என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி 12 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போது, மேட்ரிமோனி இணையதளத்தில் தினேஷ் கார்த்திக் ராஜா என்பவர் எம்பிபிஎஸ் எம்டி படித்த மருத்துவர் எனவும், வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்த‌தும் தெரிய வந்த‌து. அதில் உள்ள புகைப்படத்தை வைத்து தேடி வந்த நிலையில், வங்கிக் கணக்கு மூலம் விசாரித்த போது, போலி புகைப்படத்தை வைத்து ஏமாற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தொலைபேசி எண் மூலம் கண்டுபிடித்து விசாரித்த போது, உண்மையான பெயர் கார்த்திக் ராஜா என்பதும், பிகாம் படித்து விட்டு, மேட்ரிமோனி மூலம் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்த‌தும் தெரிய வந்த‌து. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்