கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறும் தமிழகத்தின் ஒரு பகுதி - “என்று தீருமோ எங்கள் தாகம்“ - தவிதவிக்கும் மக்கள்

x

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி, வானம் பார்த்த பூமியாக மாறி மக்கள் குடி தண்ணீருக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்திலும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப நிலை உச்சத்தை எட்டி, இந்தியாவின் பல மாநிலங்கள் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன. கடந்த சில வாரங்களாக அந்த நிலை மாறி, வெப்பம் தனிந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் தற்போது குளிர்ந்த நிலப்பரப்பாகவும் மாறிவிட்டது. ஆனால் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் வழக்கம் போல மழை பொய்த்துவிட்டது...

கடந்த சில ஆண்டுகளாக பொய்த்த மழையால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் அப்பகுதியில் வெகவாக குறைந்துவிட்டது. குடி தண்ணீர் இல்லாமல், மக்கள் குடங்களை தூக்கிங் கொண்டு தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீருக்காக கூடங்குளத்தை நம்பியிருந்த நிலையில், அங்கும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகின்றது. வரும் காலங்களில் இந்த நிலை, இன்னும் மோசமாக மாறும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தாலும், மொத்த தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.... இந்த ஊருக்கென அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலமாகவும் தண்ணீர் வருவதும், அறவே குறைந்துவிட்டது. கல்குவாரியில் தேங்கி நிற்கும் நீர் மட்டுமே தற்போதைய நீர் ஆதாரமாக மாறியுள்ளது. இந்த நீரும் போதாமல், டேங்கர் லாரிகளில் கொண்டுவரும் நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்....

நிலைமை மோசமாவதற்குள் தண்ணீர் பஞ்சத்திற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும், ராதாபுரம் எம்எல்ஏவாக உள்ள அப்பாவு, தண்ணீர் பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்