இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

x

பஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ள குர்தாஸ்பூர் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதத்துடன் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்நபரை எச்சரித்துள்ளனர். எனினும், அந்நபர் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டதால், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். மேலும், வேறு ஏதேனும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்