காமன்வெல்த் போட்டியில் நேற்று ஒரே நாளில் நடந்த மாற்றம்

x

காமன்வெல்த் விளையாட்டில் நேற்று ஒரே நாளில் 15 பதக்கங்களை கைப்பற்றி இந்திய வீர‌ர்கள் அசத்தியுள்ளனர். மொத்தமாக 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை மொத்தமாக, 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் 22 வெண்கலத்துடன், 55 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

174 பதக்கங்களுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 166 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், 91 பதக்கங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும், 48 பதக்கங்களுடன் நியூசிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்