மதுரையில் பிரியாணிக்கு பெயர்போன பிரபல ஹோட்டலுக்கு பறந்த நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை

x

மதுரையில் பிரியாணிக்கு பெயர்போன பிரபல ஹோட்டலுக்கு பறந்த நோட்டீஸ்!

உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை

மதுரையில், பிரியாணிக்கு பிரபலம் பெற்ற உணவகத்தில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த உணவகம் தொடர்பாக, கடந்த 30ம் தேதி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் புகார் அனுப்பிய நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அனுப்பிய நோட்டீசில், 7 நாட்களுக்குள் உணவகம் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், சரிசெய்யாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்