அணு அணுவாக பூமிக்குள் புதையும் இந்தியாவின் நகரத்துக்கு புதிய சோதனை - வாக்கு கொடுத்த பிரதமர் மோடி..!

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல.. கடந்த ஜனவரியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் அவ்வப்போது சாலைகளில் விரிசல், வீடுகள், கோவில்கள் மற்றும் சுவர்கள் விழுதல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது..

ஜோஷிமத் நகரமே பூமிக்குள் புதைந்து கொண்டிருப்பதாகவும், நிலச்சரிவால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் கூறியிருந்தன..

அதுவும் இரண்டு முக்கிய தவறான புவியியல் கோடுகளான Main Central Thrust (MCT) மற்றும் Pandukeshwar Thrust (PT) ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இதுபோன்ற டெக்டோனிக் செயல்பாடு காரணமாக நகரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்றும் சொல்லப்பட்டது..

ஜோஷிமத் நகரில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 குடும்பங்கள் ஜோஷிமத் நகரை விட்டு இடம் பெயர்ந்து விட்டன என்றே சொல்லலாம்...

நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப் பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது..

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்திருந்தார்...

அத்துடன், ஜோஷிமத் நகரம் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு புதைவுமண்டலம் என இப்பகுதி மாநில அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் மீண்டும் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள லக்கன்பூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு லிபுலேகா-தவகாட் சாலை 100 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

கடும் நிலச்சரிவு காரணமாக 300 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.மேலும் சாலை திறக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது...

மாநிலத்தின் அல்மோரா, பாகேஷ்வர், சாமோலி, சம்பவத், டேராடூன், கர்வால், ஹரித்துவார், நைனிடால், பித்தோராகர், ருத்ரபிரயாக் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்..

மேலும் யமுநூத்ரி, கங்கோத்ரி யாத்திரைக்காக வந்தவர்கள் நிலைமை சீரானதும் தங்களுடைய பயணத்தை தொடரலாம் என்றும், அது வரை காத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்...


Next Story

மேலும் செய்திகள்