வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு புது ஐடியா- ஆனந்த் மஹிந்திராவை வியக்க வைத்த வீடியோ

x

வீட்டில் பிரிட்ஜ் இல்லாமல் பேனில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறையை யூடியூப்-பில் பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் பாலை சூடாக்கி, ஐஸ் கட்டிகள், சீலிங் ஃபேன் உதவியுடன் பெண் ஐஸ்கிரீமை உருவாக்கிய வீடியோவை, தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவும் பகிர்ந்துள்ளார். மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும், இந்த ஐஸ்கிரீம் இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என அவர் நெகிழ்ந்திருக்கிறார். வீடியோவை பார்க்கும் பலரும் லைக் பட்டனை தட்டி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்