அரசு வாகனத்தில் வந்த மர்ம நபர்.. போலி பணி நியமன ஆணை - கை மாறிய ரூ.20 லட்சம்..? | Fake Order

x

முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பார்த்து தன்னைத் தேடி வந்த ஒருவர் தன்னிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்...

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் பள்ளி ஆசிரியரான தன் மனைவிக்கு அரசுப் பள்ளியில் பணி வழங்கக் கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து மர்ம நபர் ஒருவர் அரசு முத்திரை கொண்ட வாகனத்தில் தன்னைத் தேடி வந்ததாகவும் தன் மனைவிக்கு அரசு வேலை உறுதி என்று சொல்லி போலி பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அந்த நபர் தன்னிடம் 20 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வைத்தே வாங்கியதாகச் சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

தன்னைப் போலவே தனது உறவினர்கள் பலரையும் ஏமாற்றி, அந்த நபர் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்