தனது 5 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாய்.. - உலகையே மிரள வைத்த சம்பவம்

தன்னுடைய 5 குழந்தைகளைக் கொலை செய்த தாய் 16 வருடங்களுக்குப் பிறகு கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெல்ஜியத்தில் நிகழ்ந்துள்ளது...

பிப்ரவரி 28, 2007ல் ஜெனிவிவ் லெர்மிட் என்ற பெண் தனது மகன் மற்றும் 4 மகள்களின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது... தானும் தற்கொலை செய்து கொள்ள அவர் முயலவே, அம்முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஜெனிவிவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கடந்த 2008ல் சிறையில் அடைக்கப்பட்டார். 2019ல் அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது குழந்தைகளைக் கொன்ற 16வது ஆண்டு நினைவு நாளிலேயே ஜெனிவிவ்வும் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாள முடியாத உளவியல் ரீதியான பிரச்சினைகளை அனுபவிப்பவர்கள் கருணைக் கொலை முடிவை எடுக்க பெல்ஜியம் சட்டம் அனுமதிக்கிறது... கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 966 பேர் பெல்ஜியத்தில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது 2021ம் ஆண்டை விடவும் 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com