ஊரு விட்டு ஊரு வந்து தாய் மகன் செய்த காரியம் - CCTV - யில் சிக்கிய அதிர்ச்சி

x

புதுச்சேரியில் நகை கடையில் 3 சவரன் நகையை திருடி சென்ற தாய் மற்றும் மகனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ராஜா. இரு தினங்களுக்கு முன்பு இவரின் கடைக்கு வந்த தாய் மற்றும் மகன் இருவரும் நகைகள் வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த 3 சவரன் நகையை திருடியுள்ளனர். இந்த சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் கடை உரிமையாளர் போலீசில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், செல்வி மற்றும் அவரது மகன் பாலகுமரனை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவர் மீதும் தமிழகத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிவந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்