தொடர்ந்து Youtube-ல் வீடியோ பார்த்த சிறுமி..செல்போன் வெடித்து பலியான சோகம்..!

x
  • கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது திருவில்வமலை பகுதி…இதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரின் ஒரே மகள் தான் தற்போது செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுமி ஆதித்யஸ்ரீ.
  • தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற காரணத்தால் ஆதித்யஸ்ரீ செல்போனும், கையுமாகவே வளர்ந்ததாக சொல்லபடுகிறது.
  • லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக தான் ஆதித்யஸ்ரீக்கு அந்த செல்போனை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.ஆனால், படிப்பு நேரம்போக பொழுதுபோக்கிற்காகவும் செல்போனை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார் ஆதித்யஸ்ரீ.
  • ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவது, யூடியூப்பில் வீடியோ பார்ப்பதென பொழுதனைக்கும் செல்போனை பார்த்த வளர்ந்திருக்கிறார் அந்த சிறுமி.
  • மகள் சிறுவயதிலேயே செல்போன் மூலம் பல விபரங்களை தெரிந்துக்கொண்டதை பெற்றோர்களும் பாசிட்டீவாகவே நினைத்து மகளை கண்டிக்காமல் செல்போனை தொடர்ந்து உபயோகிக்க அனுமதித்திருக்கிறார்கள். அந்த அலட்சியமும் தற்போது ஆதித்யஸ்ரீயின் உயிர் பறிப்போனதுக்கு ஒரு காரணமென கூறப்படுகிறது.
  • ஆம், சம்பவத்தன்று ஆதித்யஸ்ரீ செல்போனை விடாமல் பயன்படுத்தியிருக்கிறார்… கண்ணிமைக்கால் தொடர்ந்து யூடியூபில் வீடியோ பார்த்ததாக கூறப்படுகிறது… அப்போது கையிலிருந்த செல்போன் சூடாகி திடீரென்று வெடித்து சிதறியிருக்கிறது… எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் ஆதித்யஸ்ரீயின் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது… உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்… ஆனால், சிகிச்சை பலனின்றி ஆதித்யஸ்ரீ பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்…
  • இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த போலீசார் ஆதித்யஸ்ரீயின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்