ஆப் செய்த புளூ டிக்கை ஆன் செய்யும் மஸ்க் - இனி ட்விட்டரில் மீண்டும் நவ. 29-ல் புளூ டிக்

x

ட்விட்டரில் வரும் 29 ஆம் தேதி முதல் புளூ டிக் சேவை அமலாகிறது என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதிகார கணக்குகளை உறுதி செய்யும் புளூ டிக் சேவைக்கு கட்டணம் என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 660 ரூபாயை கொடுத்துவிட்டு, பலரும் புளு டிக்குகளை வாங்க போலிகள் நடமாட தொடங்கியது. ட்விட்டரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதும், எலான் மஸ்க் புளூ டிக் சேவையை தற்காலிகமாக முடக்கினார். இப்போது இந்த சேவை வரும் 29 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். கணக்கின் உண்மை தன்மையை உறுதி செய்ய, பல கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களே புளூ டிக் என தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் கணக்குகளுக்கும் கட்டணமா? என்ற கேள்விக்கு இன்னும் சில மாதங்களில் கட்டணம் செலுத்தாத கணக்குகளின் புளூ டிக் நீக்கப்படும் என கறாராக தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்