காவிரி ஆற்றில் மீனுக்கு போட்ட வெடியில் குளித்து கொண்டிருந்தவர் பலி - எடப்பாடி அருகே பயங்கரம்

x

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து தோட்டாவை வீசிய போது, விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெடி மருந்து தோட்டா வீசி, மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, பெருமாள் என்பவர் வெடி மருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசிய போது, குளித்துக் கொண்டிருந்த மோகன் குமார் என்பவர் வெடி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பூலாம்பட்டி போலீசார், இளைஞரிடம் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி மருந்து தோட்டாவை வீசிய பெருமாளை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த மோகன் குமார், ஆணை புலிகாடு பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில், உறவினர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்த போது விபத்து நிகழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்