இரண்டாவதும் பிறந்த பெண் குழந்தை... மனஉளைச்சலில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மதுபோதையில் உறங்கிய நபர்

x

கோவையில், மதுபோதையில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிய நபருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சேலத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை சூலூருக்கு லாரி சென்று கொண்டிருந்தது. விழுப்புரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், பைபாஸ் சாலையில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார். அதீத போதையால் இருந்ததால் லாரியை தொடர்ந்து இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது, ஓட்டுநர் ராஜீவ்காந்தி போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்