சிறுநீர் பையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த நபர்

x

சத்தியமங்கலம் அருகே சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாதம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர், சிகிச்சைக்காக பொருத்தப்பட்ட சிறுநீரக பையுடன் 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்