வெல்டிங் செய்த வடமாநிலத்தவர்... தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பயங்கரம் - அனல்மின் நிலையத்தில் விபரீதம்

வடசென்னை அனல்மின் நிலைத்தில் கால் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

குளிரூட்டும் கோபுரத்தில் வெல்டிங் பணி முடித்து கீழே இறங்கும் போது ஒப்பந்த தொழிலாளர் ஹேமராஜ் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com