மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர்.. குரைத்து குரைத்தே காப்பாற்றிய நாய் - ஒரே நொடியில் நடந்த அதிசயம்

x

ஜப்பானில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. Wakaba-kuவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது... 50 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பால் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்துள்ளார்... இதைக் கண்டு அருகில் இருந்த ஐந்தே வயதான Koume என்ற நாய் சாதூர்யமாக செயல்பட்டு விடாமல் குரைத்துள்ளது. நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால் சிறிது தூரத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், Koumeவுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்