நடுரோட்டில் தீப்பிடித்த சொகுசு கார் - அடுத்தடுத்து எரிந்து நாசமான பைக்குகள்

x

சென்னை அடையாறில், சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடையாறு சர்தார் பட்டேல் சாலை வழியாக சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மேலும் பரவி மேம்பாலத்தின் கீழ், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களுக்குப் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்